என் பாக்கிஸ்தானி நண்பன் :

Tamil Posts

“இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பாக்கிஸ்தான்”  என்று வாட்சாப்  குழுவில் பதிவிட்டேன்.
பதிவிட்ட  சில நிமிடங்கள்  பத்து உறுப்பினர்கள் வெளியேறினர்.

நானும் அதையே செய்திருப்பேன் என்றால்
இந்த பதிவு ௨ங்களுக்கே.

அந்த பதிவில் என்ன தவறு அகஸ்ட் 13 1947 வரை பாக்கிஸ்தான், வங்காளம் இந்தியா எல்லாம் ஒன்றே.
வெள்ளைகாரன் போட்ட கோடு மட்டுமே நம்மை பிரித்தது .

காந்திஜி, நேதாஜி என அனைத்து சுதந்திர போரளிகளும்  பாக்கிஸ்தானுக்கும் வங்காளத்திற்கும்
சேர்த்தே போராடினார்கள்.

நாம்(இந்தியர்கள்)  பெற்ற  சுதந்திரத்தில்  ஜின்னா அவர்களுக்கும் பங்கு உண்டு.

பின் ஏன் இந்த பகுபாடு .

என் நண்பன் :

என் பெயர் “அருண்”.
என் பாக்கிஸ்தானி நண்பன் பெயர் “செசாத் அஹமத்”.

நான் அரபு எமிரேட்சில் வெலை பார்த்தேன், பக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்தார் அவர்.
எப்படியோ நண்பர்கள் ஆனோம். அரம்பதில் “கிரிக்கெட்” , “உலக சினிமா” பற்றி மட்டுமே பேசினோம்.

சில சமயங்களிள்  இந்தியா , பாகிஸ்தான் உறவு மற்றும் உலக அரசியல் பேசுவோம்.

ஒரு நாள் அவர் என்னிடம் எனக்கு இந்தியாவை சுற்றி பார்க்க வேண்டுமென்று ஆசை என்றார் . அதற்கு என்ன,
நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறேன் வாருங்கள் என்றேன்.

எனக்கு பயமாக உள்ளது என்றார்.
நான் ஏன் என்று வினவினேன்.
அவர் அதற்கு என்னை இந்தியாவில் தீவிரவதியாக நினைக்ககூடும். நான் உங்கள் விட்டிற்கு வந்தால் உங்களுக்கும்
கூட அது  நல்லது அல்ல என்றார்.

இவ்வார்த்தைகள் என்னிடம் பல கேள்விகளை எழுப்பி சென்றன. சில நிமிட உரையாடலுக்கு பின்னர்
தென்இந்தியா சற்றே பாதுகாப்பானதே என்று ஒப்பு கொண்டார்.

எனக்கும் பாக்கிஸ்தான் வர ஆசை என்றேன் (சிரிய பயத்துடன்).

நாங்கள் பேசிகொண்டிற்கும் போது நடுவில் ஒரு இந்திய நண்பர் வந்தார்.  நாங்கள் அப்போது போர்கள்
பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
அவர் குறுக்கிட்டு “பாக்கிஸ்தான் எங்கள் கால் தூசிக்கு சமம் , நாங்கள் நினைத்தல் ஒரு நாளில்
பாகிஸ்தானை தரை மட்டம் அக்குவோம் என்று கூறி என்னை பார்த்து சிரித்தார் “.
நான் ஒன்றும் பேசாது தலை குனிந்து விட்டேன் .

சில நிமிடங்களில் அவர் விடைபெற்றார்
அதன் பின்  பாகிஸ்தானி நண்பர் என்னிடம் ” பாகிஸ்தானிலும் இது போன்று பல முட்டால்கள் உண்டு என்றார்”

சிரித்து விட்டேன்.

அன்று ஒன்று விளங்கியது நண்பர்களாகுவதற்கு நாடு/மொழி/மதம்/சாதி என எது வித்திடாலும்
நண்பர்களாக நீடிப்பது அவரவர் குணங்களை பொருத்தது.

இரண்டு எழுத்துகளிள் அவர் இந்தியாவிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று அறித்துகொள்ளலாம்
அவர் சொந்த ஊர் பெயர் “குஜராத்”. அவரின் தாய் மொழி “பஞ்சாபி”. இப்போதாவது நம்புங்கள் வெள்ளைகாரன் போட்டது வெறும் கோடு மட்டுமே.

அப்பொழுது உலக கொப்பை கிரிக்கெட் நடந்த  நேரம், பாக்கிஸ்தான் அணி இந்தியா செல்லுமா என்ற கேள்விகள் எழுந்த நாட்கள் அது . அவர் “மொகலி” யில்  பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியிற்கு பாதுகாப்பு மிக்க நகரம் என்றார்.பின் அவரே சொன்னார் இறுதியாக  மொகலியில் நடந்த கிரிக்கெட் போட்டியை காண சென்ற பாக்கிஸ்தானியர்கள் இருவர்(மாணவர்கள்) நாடு திரும்பவில்லை என்றார். பின் அதையேன் பாதுகாப்பான இடம் என்கிறீர்கள் என்றேன்.
அதற்கு “இருவர்” மட்டுமே நாடு திரும்பவில்லை. ஆகையால் “மொகலி”யே சிறந்த இடம் என்றர்.

நம்மில் பலருக்கு இது ஒரு செய்தியாக கூட தெரிந்திருக்காது, ஏனேனில் நாம் காண்பவை,கேட்பவை,படிப்பவை அணைத்தும் இந்திய ஊடகங்கலே.

ஆரம்பத்தில் போர் மற்றும் தீவிரவாதம் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தோம். பின்பு அவையும் உரையாடலில் கலந்தன.

திடீர் என்று ஒரு நாள் மும்பை தாக்குதல் பற்றி பேச தொடங்கினோம்.
அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின

 

read full article in keetru.com : http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31413-2016-09-09-12-37-26